/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வீட்டின் மீது விழுந்த மின்கம்பம்: ஓடுகள் சேதம்
/
வீட்டின் மீது விழுந்த மின்கம்பம்: ஓடுகள் சேதம்
ADDED : செப் 29, 2025 04:46 AM
திருவாடானை : திருவாடானை அருகே கருப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் வெள்ளையன். இவருக்கு சொந்தமான ஓட்டு வீடு அருகே மின்கம்பம் சேதமடைந்திருந்தது.
நேற்று முன்தினம் மாலையில் பலத்த காற்றுக்கு மின்கம்பம் முறிந்து வீடு மீது விழுந்தது. இதில் ஓடுகள் சேதமடைந்தன.அதனை தொடர்ந்து மின்சாரம் நிறுத்தபட்டு மின்கம்பம் அகற்றபட்டது.
இது குறித்து அக் கிராம மக்கள் கூறுகையில், இப்பகுதியில் சேதமடைந்த மின்கம்பங்கள் நிறைய உள்ளன. அவைகளை அகற்றிவிட்டு புதிய மின்கம்பம் அமைக்கவேண்டும்.
சில நாட்களுக்கு முன்பு இக்கிராமத்திற்கு அருகே உள்ள பூசாரியேந்தல் வயல்காட்டில் மின்கம்பி அறுந்துவிழுந்து மின்சாரம் தாக்கியதில் 5 ஆடுகள் இறந்தன. விவசாய பணிகள் துவங்கியுள்ளதால் வயல்களில் உரமிடுதல், களை எடுத்தல் போன்ற பணிகள் நடக்கிறது.
எனவே வயல்வழியாக செல்லும் துருப்பிடித்த மின்கம்பிகளை மாற்றி அமைக்க மின்வாரிய அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.