/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சாலையின் நடுவில் மின்கம்பம் வாகனங்கள் செல்வதற்கு சிரமம்
/
சாலையின் நடுவில் மின்கம்பம் வாகனங்கள் செல்வதற்கு சிரமம்
சாலையின் நடுவில் மின்கம்பம் வாகனங்கள் செல்வதற்கு சிரமம்
சாலையின் நடுவில் மின்கம்பம் வாகனங்கள் செல்வதற்கு சிரமம்
ADDED : பிப் 13, 2024 04:54 AM

முதுகுளத்துார், : முதுகுளத்துார் அருகே சடையனேரி பிள்ளையார் கோவில் தெருவில் சாலையின் நடுவில் உள்ள மின்கம்பத்தால் வாகனங்கள் செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர்.
சடையனேரி கிராமத்தில் வசிக்கின்றனர் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்கு கடலாடி துணைமின் நிலையத்திலிருந்து மின் வினியோகம் வழங்கப்படுகிறது.
சடையனேரி பிள்ளையார் கோவில் தெருவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பேவர் பிளாக் சாலை அமைக்கப் பட்டுள்ளது.
இந்நிலையில் தெரு சாலையின் நடுவில் மின்கம்பம் உள்ளது. இதனால் இவ்வழியே வாகனங்களில் செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர்.
அவசர நேரத்தில் ஆம்புலன்ஸ் செல்வதற்கு கூட சிரமமாக உள்ளது. எனவே சாலையின் நடுவில் உள்ள மின்கம்பத்தை மாற்றி அமைக்க மின்வாரியத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.