/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மின்சாரம் தாக்கி எலக்ட்ரிசியன் பலி
/
மின்சாரம் தாக்கி எலக்ட்ரிசியன் பலி
ADDED : ஜன 05, 2025 06:27 AM
ஆர்.எஸ்.மங்கலம் : திருவாடானை அருகே சிறுவண்டல் பகுதியைச் சேர்ந்த அழகர் மகன் பாண்டித்துரை 38. எலக்ட்ரீசியனான இவர் ஆர்.எஸ்.மங்கலம் அருகே ஆவரேந்தலில் உள்ள தனது சகோதரி வீட்டிற்கு வந்துள்ளார்.
சகோதரி வீட்டில் எலக்ட்ரிக்கல் வேலை செய்த போது பாண்டித்துரை மின்சாரம் தாக்கி விழுந்தது மயக்கம் அடைந்தார்.
உறவினர்கள் ஆர்.எஸ்.மங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். மருத்துவமனையில் டாக்டர்கள் இல்லாத நிலையில் பணியில் இருந்த நர்ஸ் பரிசோதனை செய்து பாண்டித்துரை இறந்ததை உறுதி செய்தார்.
இந்நிலையில், மருத்துவமனையில் டாக்டர் இல்லாததுதான் இறப்புக்கு காரணம் என உறவினர்கள் மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர். எஸ்.மங்கலம் போலீஸ் எஸ்.ஐ.,முகமது சைபுல் கிஷாம் தலைமையிலான போலீசார் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இறந்தவரின் உடலை ராமநாதபுரம் மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆர்.எஸ். மங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.