ADDED : பிப் 28, 2026 07:46 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மின் வாரிய தொழிற்சங்கங் களின் கூட்டுக்குழு சார்பில், ஊதிய உயர்வை ரத்து செய்த தமிழக அரசை கண்டித்து மின்வாரிய மேற்பார்வை பொறி யாளர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
தமிழ்நாடு மின்சார வாரிய பொறியாளர் கழகம் கிளை செயலாளர் குமாரவேல் தலைமை வகித்தார். மின்வாரியத்தில் பணி யாற்றும் குரூப் 1, 2 நிலையிலுள்ள பொறியாளர்கள், அலுவலர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு ஊதிய உயர்வு முன்மொழிவில் ஊதிய உயர்வு இல்லை என்ற பரிந்துரையை அரசு திரும்ப பெற வேண்டும். உடன் ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என கோஷமிட்டனர்.
தமிழ்நாடு பவர் இன்ஜினியர்ஸ் சங்கம் மாநில துணைத் தலைவர் குருவேல், எம்ப்ளாயி பெடரேஷன் செயலாளர் வீரசேகர், பொறியாளர் ஐக்கிய சங்க செயலாளர் ரவி, சி.ஐ.டி.யு., சங்க செய லாளர் முருகன், இன்ஜியர் சங்கத் தலைவர் சிக்கந்தர் பாட்சா உட்பட பொறியாளர்கள் பலர் பங்கேற்றனர்.
