/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கடலாடி போஸ்ட் ஆபீஸ் அருகே சவுக்கு கம்பில் மின் இணைப்புகள்
/
கடலாடி போஸ்ட் ஆபீஸ் அருகே சவுக்கு கம்பில் மின் இணைப்புகள்
கடலாடி போஸ்ட் ஆபீஸ் அருகே சவுக்கு கம்பில் மின் இணைப்புகள்
கடலாடி போஸ்ட் ஆபீஸ் அருகே சவுக்கு கம்பில் மின் இணைப்புகள்
ADDED : ஏப் 18, 2025 11:19 PM

கடலாடி:
கடலாடி போஸ்ட் ஆபீஸ் மின் இணைப்பு மற்றும் அதனை சுற்றியுள்ள 15 கடைகளில் இணைப்புகள் சவுக்கு கம்பத்தின் மூலம் பகிர்ந்து அளிக்கப்படுகின்றன.
கடலாடி போஸ்ட் ஆபீஸ் அருகே மின்கம்பம் நடப்பட்டிருந்தது. இது சேதமடைந்ததால் அங்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 12 அடி உயரத்தில் சவுக்கு கம்பம் நடப்பட்டு கம்பத்தில் இருந்து போஸ்ட் ஆபீஸ் மற்றும் 15 கடைகளுக்கு மின் இணைப்பு வழங்கும் பிரதான கம்பமாக சவுக்கு கம்பு உள்ளது.
அப்பகுதி மக்கள் கூறியதாவது:
இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக சவுக்கு கம்பத்தில் மின் இணைப்புகளை வித்தியாசமான முயற்சியாக கடலாடி மின்வாரியத்தினர் வழங்கி வருகின்றனர். சவுக்கு கம்பத்தின் அடிப்பகுதி முறிந்து விழும் விபத்து அபாயம் நிலவுகிறது.
புதிய மின் கம்பம் அமைக்கக்கோரி கடலாடி மின்வாரிய துணை மின் நிலையத்தில் மனுக்கள் கொடுத்துள்ளோம். இதுவரை பார்வையிடாமலும் அலட்சியமாகவும்மெத்தனப் போக்கை கடைபிடித்து வருகின்றனர்.
பலத்த காற்று அல்லது மழைக்காலங்களில் அச்சத்துடன் அப்பகுதியை கடக்க வேண்டிய நிலை உள்ளது. நாள்தோறும் போஸ்ட் ஆபீசுக்குஏராளமானோர் வருகின்றனர். எனவே கடலாடி மின்வாரியத்தினர்சவுக்கு கம்பத்திற்கு பதில் மின்கம்பத்தில் இணைப்புகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.