ADDED : ஜன 09, 2026 05:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. திட்ட தலைவர் காசிநாதன் தலைமை வகித்தார். முன்னாள் மாநில தலைவர் குருவேல், செயலாளர் முருகன் முன்னிலை வகித்தனர்.
மின்சார சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெறுவது, ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை தனியாருக்கு வழங்குவதை கண்டித்தும், ஒப்பந்த பணியாளருக்கு தினக்கூலி ரூ.764 வழங்க கோரியும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

