ADDED : செப் 29, 2026 04:31 PM
அ நிறம் | அளவு
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு மின்வாரிய எம்ப்ளாயீஸ் பெடரேஷன் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மதுரை மண்டலச் செயலாளர் வீரசேகர் தலைமை வகித்தார். அமைப்புச் செயலாளர் மாரிமுத்து, செயல் தலைவர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர்.
மின் இணைப்பு கணக்கீட்டு பணிக்கு 6 மாத கால ஒப்பந்த அடிப்படையில் ஆட்களை தேர்வு செய்வதை நிறுத்த வேண்டும். மின் வாரிய பணிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் ஆட்களை தேர்வு செய்யும் நடைமுறையை முற்றிலுமாக கைவிட வேண்டும் என வலியுறுத்தினர். பொருளாளர் பால்ராசு, மகளிரணி செயலாளர் சரண்யா பங்கேற்றனர். ––
