ADDED : டிச 25, 2025 05:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: ராமநாதபுரம் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) பாரி தலைமையில் தொழிலாளர் துணை ஆய்வாளர், உதவி ஆய்வாளர்களுடன் தங்கச்சிமடம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மீன் கடைகள், கறிக்கடைகள், காய்கறிகடைகள், பழக்கடைகள் மற்றும் தெருவோர அனைத்து கடைகளிலும் ஆய்வு செய்தனர்.
அப்போது மறு முத்திரையில்லாமல் பயன்பாட்டில் வைத்திருந்த 16 மின்னணு தராசுகள், 6 மேஜை தராசுகள், 3 விட்டத் தராசுகள், 4 கூட்டல் அளவை, 19 இரும்பு எடைக்கற்கள் என 50 எடை அளவுகள் பறிமுதல் செய்யப்பட்டது. வணிகர்கள் மறுமுத்திரையிடாத எடையளவுகள் பயன்பாட்டில் வைத்திருப்பது கண்டறியப்பட்டால் எடையளவுச் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூ.5000 வரை அபராதம் விதிக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

