/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தொண்டி 5வது வார்டு தேர்தல் மின்னணு இயந்திரம் வந்தது
/
தொண்டி 5வது வார்டு தேர்தல் மின்னணு இயந்திரம் வந்தது
தொண்டி 5வது வார்டு தேர்தல் மின்னணு இயந்திரம் வந்தது
தொண்டி 5வது வார்டு தேர்தல் மின்னணு இயந்திரம் வந்தது
ADDED : ஏப் 20, 2025 05:11 AM
தொண்டி : தொண்டி பேரூராட்சியில் காலியாக உள்ள கவுன்சிலர் பதவிக்கான இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியாகி உள்ளதால் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வந்தன.
தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள இடங்களுக்கு மே மாதம் இடைத்தேர்தல் நடத்த மாநில தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
திருவாடானை தாலுகா தொண்டி பேரூராட்சி ஐந்தாவது வார்டு கவுன்சிலராக தேர்ந்தெடுக்கபட்ட தொண்டிஸ்வரன் 2023 மே மாதம் இறந்தார்.
அந்த வார்டுக்கான பதவி காலியாக உள்ளது. அங்கு இடைத்தேர்தல் நடத்த அறிவிப்பு வெளியாகியுள்ளதால் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வந்தன.
இது குறித்து தொண்டி பேரூராட்சி அலுவலர்கள் கூறியதாவது:
மே மாதம் இடைத்தேர்தல் நடத்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தேதி அறிவிக்கவில்லை. தேர்தல் நடத்துவதற்காக மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வந்தன. அவை கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அங்கு ஆய்வு செய்யப்பட்டு பாதுகாப்பான அறையில் இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது.
தேர்தல் நடத்துவதற்கு வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடந்து வருகிறது என்றனர்.

