/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திர பாதுகாப்பு ஆய்வு
/
மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திர பாதுகாப்பு ஆய்வு
ADDED : ஜூலை 29, 2025 12:31 AM
ராமாதபுரம்: மாவட்டத்தில் உள்ள ராமநாதபுரம், முதுகுளத்துார், பரமக்குடி, திருவாடானை ஆகிய சட்டசபை தொகுதிகளுக்குரிய மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பு தன்மை குறித்து கலெக்டர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் ஆய்வு செய்துள்ளளார்.
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகம் மற்றும் வேளாண்மை வணிக ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் அலுவலக வளாகத்தில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கிடங்கை கலெக்டர் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது ராமநாதபுரம் ஆர்.டி.ஓ., ராஜமனோகரன், தாசில்தார்கள் (தேர்தல்) காளீஸ்வரன், ரவி அரசியல் கட்சி பிரமுகர்கள், அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.