ADDED : ஜூலை 24, 2026 12:16 AM

அ நிறம் | அளவு
கடலாடி: கடலாடி வட்டார கல்வி அலுவலகம் முன் அகில இந்திய ஆசிரியர்கள் கூட்டணியின் செயல் திட்டத்தின் படி கடலாடி வட்டார தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. வட் டாரத் தலைவர் முனியசாமி தலைமையில் 'டெட்' எனப்படும் ஆசிரியர் தகுதி தேர்வை ரத்து செய்யக்கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில துணைச் செயலாளர் கலைமுருகன் பேசினார்.
கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கடலாடி ஊராட்சி ஒன்றியத்தில் பணிபுரியும் அனைத்து அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். ஆசிரியர் கூட்டணி சங்க பொருளாளர் லிங்கம் நன்றி கூறினார்.
