/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
எமனேஸ்வரம் கூட்டுறவு சங்க பணியாளர் பேரவை கூட்டம்
/
எமனேஸ்வரம் கூட்டுறவு சங்க பணியாளர் பேரவை கூட்டம்
ADDED : ஏப் 23, 2025 04:31 AM
பரமக்குடி :   பரமக்குடி எமனேஸ்வரம் கூட்டுறவு சங்கங்களின் பணியாளர் சங்க பேரவை கூட்டம் நடந்தது. சங்கத் தலைவர் ஜோதி கிருஷ்ணன் தலைமை வகித்தார். செயலாளர் கண்ணன் முன்னிலை வகித்தார். பொருளாளர் அனந்த கிருஷ்ணன் வரவேற்றார்.
அப்போது 2025ம் ஆண்டு ஆண்டறிக்கை வாசித்து வரவு, செலவு அங்கீகரிக்கப்பட்டது. பணி நிறைவு பெற்ற சங்கப் பணியாளர்கள் கவுரவிக்கப்பட்டு குடும்ப நலநிதி வழங்கப்பட்டது. மாநில கூட்டமைப்பு தலைவர் நடனசபாபதி, பொதுச்செயலாளர் சவுண்டப்பன், பொருளாளர் வெங்கடேஸ்வரன், துணைத் தலைவர்கள் வேலுமணி, வடிவேல், தொழிற்சங்க மாவட்ட செயலாளர் ராஜன் கலந்து கொண்டனர்.
நெசவாளர் கூட்டுறவு சங்க பணியாளர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும். கைத்தறி துணிகளுக்கு தள்ளுபடி மானிய உச்சவரம்பை நீக்க வேண்டும்.கைத்தறிக்கு ஜி.எஸ்.டி., வரியில் இருந்து முழு விலக்கு அளிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
துணைத் தலைவர் ரமேஷ் பாபு, உதவி செயலாளர் கோபி உட்பட நிர்வாக குழுவினர், ஆலோசனை குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

