/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மழைக்காலத்தில் மின் விபத்து தடுப்பு வழிமுறைகளை பின்பற்ற வலியுறுத்தல்

ADDED : அக் 27, 2024 03:37 AM
ராமநாதபுரம் : மழைக்காலத்தில் ஈரமான கைகளுடன் சுவிட்சுகள், பிளக்குகளை தொடக்கூடாது. மின்சாரத்தில் ஏற்பட்ட தீயினை தண்ணீர் ஊற்றி அணைக்க கூடாது என மின்வாரிய அதிகாரிகள் வலியுறுத்தினர்.
ராமநாதபுரம் மின்வாரிய மேற்பார்வைப் பொறியாளர் பிரபாகரன் கூறியிருப்பதாவது:
இடி, மின்னலின் போது அலைபேசி, மிக்சி, டி.வி., போன்றவைகளை பயன்படுத்தக் கூடாது. மின்கம்பிகளுக்கு அருகில் உள்ள மரக்கிளையை அகற்றும் போது அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு தெரிவிக்க வேண்டும்.
ஈரமான கைகளுடன் சுவிட்சுகள், பிளக்குகள், மின்சார ஓயர்களை தொடக்கூடாது.
பிரிட்ஜ், கிரைண்டர் ஆகிவற்றிற்கு 3 பின் பிளக்குகளை பயன்படுத்த வேண்டும். இதுபோன்ற மின்விபத்து தடுப்பு வழிமுறைகளை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும். மழைக்காலத்தில் மின்குறைபாடுகளை சரிசெய்ய மின்வாரிய அலுவலர்களை அலைபேசியில் தொடர்புகொள்ளலாம் என்றார்.