/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
காவிரி கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்த வலியுறுத்தல்; கோடை காலம் துவங்கியது
/
காவிரி கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்த வலியுறுத்தல்; கோடை காலம் துவங்கியது
காவிரி கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்த வலியுறுத்தல்; கோடை காலம் துவங்கியது
காவிரி கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்த வலியுறுத்தல்; கோடை காலம் துவங்கியது
ADDED : பிப் 26, 2024 12:54 AM

திருவாடானை : கோடை காலம் துவங்கியதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தை விரைவாக செயல்படுத்த மக்கள் வலியுறுத்தினர்.
கோடை காலம் துவங்கிய சில நாட்களிலேயே குடிநீர் தட்டுப்பாடும் தலைதுாக்க ஆரம்பித்து விட்டது. இந்த ஆண்டு கோடை வெயில் அதிகமாக இருக்கும் என்ற அச்சம் பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளது. திருவாடானை தாலுகாவில் பல்வேறு கிராமங்களில் குடிநீர் வராதததால் வீட்டு உபயோகத்திற்கு கூட தண்ணீர் கிடைக்காமல் சிரமம் அடைந்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஜல்ஜீவன் திட்டத்தில் புதிய காவிரி கூட்டு குடிநீர் திட்டம் துவக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை நிறைவேற்றும் வகையில் தாலுகா தலைமையிடங்களில் ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டது.
திருவாடானையில் மே மாதம் நடந்த கூட்டத்தில் கலெக்டர் மற்றும் குடிநீர் வடிகால் வாரிய உயர் அதிகாரிகள், அனைத்து ஊராட்சி தலைவர்களும் கலந்து கொண்டனர். ஊராட்சி தலைவர்களுக்கு காவிரி கூட்டுக் குடிநீர் விநியோகத்தின் விபரம் குறித்த விண்ணப்பங்கள் வழங்கப்பட்டது.
அதில் காவிரி நீர் முறையாக வருகிறதா, எத்தனை நாட்களுக்கு ஒரு முறை வழங்கப்படுகிறது என்பது போன்ற பல விபரங்கள் கேட்கப்பட்டன. அந்த விண்ணப்பங்களை ஊராட்சி தலைவர்கள் பூர்த்தி செய்து வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கொடுத்தனர்.
ஆலோசனைக் கூட்டம் நடந்து 10 மாதங்கள் ஆகிவிட்டது. ஆங்காங்கே குழாய்கள் பதிப்பதற்காக சாலை ஓரங்களில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் பணிகள் இன்னமும் துவங்கவில்லை. கடந்த ஆண்டு பெய்த மழையால் கண்மாய், குளங்கள் நிரம்பிய போதும் கடும் வெயிலால் நீர் மட்டம் குறைந்து வருகிறது.
வரும் காலங்களில் குடிநீர் தட்டுப்பாடு அதிகரிக்கும். அதற்குள் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தை விரைந்து செயல்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

