/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
விவசாய நிலங்களுக்கு செல்லும் பாசன வாய்க்கால்களை சீரமைக்க வலியுறுத்தல்
/
விவசாய நிலங்களுக்கு செல்லும் பாசன வாய்க்கால்களை சீரமைக்க வலியுறுத்தல்
விவசாய நிலங்களுக்கு செல்லும் பாசன வாய்க்கால்களை சீரமைக்க வலியுறுத்தல்
விவசாய நிலங்களுக்கு செல்லும் பாசன வாய்க்கால்களை சீரமைக்க வலியுறுத்தல்
ADDED : செப் 21, 2024 05:16 AM
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாயில் இருந்து பாசன நிலங்களுக்கு தண்ணீர் செல்லும்வாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சீரமைக்க விவசாயிகள் வலியுறுத்தினர்.
ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாயில் உள்ள 20 பாசன மடைகள் மூலம் 12 ஆயிரத்து 142 ஏக்கர் விவசாய நிலங்கள் பயனடைகின்றன. முக்கியத்துவம் வாய்ந்த பெரிய கண்மாயில் இருந்து ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சி குடியிருப்பு பகுதிகள் வழியாக செல்லும் பெருமாள் மடை, பட்டாபிராமன் மடை, உரளி மடை வாய்க்கால்களில் குடியிருப்பு கழிவுகள் தேங்கி பாசன வாய்க்கால்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளன.
மேலும் குடியிருப்பு பகுதி வழியாக செல்லும் சில வாய்க்கால்களில் பெரும்பாலான பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் உள்ளதால் பாசன வாய்க்கால்களின் அளவு குறுகியுள்ளது. இதனால் மழைக்காலங்களில் டவுன் பகுதிகளில் தண்ணீர் வெளியேற வழியின்றி குடியிருப்பு பகுதிகளை ஆண்டு தோறும் சூழ்ந்து வருகிறது.
எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மழைக்காலம் துவங்குவதற்கு முன் பாசன வாய்க்கால்களை அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். வாய்க்கால்களில் தேங்கியுள்ள கழிவுகளையும் அகற்ற வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.