/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பெரிய கண்மாய் கரையோரம் புதரை அகற்ற வலியுறுத்தல்
/
பெரிய கண்மாய் கரையோரம் புதரை அகற்ற வலியுறுத்தல்
ADDED : அக் 21, 2024 04:59 AM

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய் கரையின் இருபுறத்திலும் உள்ள புதர்களால் பாசன மடைகளுக்கு செல்லும் விவசாயிகள் பாதிப்படைவதால் அகற்ற வலியுறுத்தினர்.
ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாயில் மழைக்காலங்களில் தேக்கப்படும் தண்ணீர் 20 பாசன மடைகள் வழியாக 12,142 ஏக்கரில் விவசாய நிலங்கள் பயனடைகிறது. தற்போது பெரிய கண்மாய் பாசன பகுதியில் நெல் விதைப்பு செய்யப்பட்டு நெற்பயிர்கள் முளைத்துள்ளன.
இந்நிலையில் பெரிய கண்மாய் கரையின் ரோட்டின் இருபுறத்திலும் சீமைக்கருவேல மரங்கள் மற்றும் புதர்கள் சூழ்ந்துள்ளதால் பாசன மடைகளுக்கு விவசாயிகள் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மழைக்காலம் துவங்கிய நிலையில் கண்மாயில் முழுமையாக தண்ணீர் தேங்குவதற்கு முன்பாக பாசனம் மடைகளுக்கு செல்லும் ரோட்டின் கரையில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.