/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பாம்பூருரணியை துார்வார வலியுறுத்தல்
/
பாம்பூருரணியை துார்வார வலியுறுத்தல்
ADDED : அக் 18, 2024 05:03 AM
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் ஊருணிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளைஅகற்றி துார் வாரி கழிவு நீர் செல்லாமல் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனித நேய மக்கள் கட்சிசார்பில் கலெக்டர் சிம்ரன் ஜீத்சிங் காலோனிடம் புகார் அளித்துள்ளனர்.
மனுவில் கூறியிருப்பதாவது: முன்னோர்கள்நிலத்தடி நீரை சேமிக்கபல நுாற்றாண்டுகளுக்கு முன் நகர் முழுவதும் பல ஊருணிகளை ஏற்படுத்தி மழை நீரை சேமித்து கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க முறையான ஏற்பாடுகளை செய்து வைத்திருந்தனர்.
ராமநாதபுரம் நகராட்சியில் மழைக்காலத்தில் நீரை வீணாக்காமல் அந்தந்த ஊருணிகளில் தேக்கி கோடை காலத்திலும் குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஊருணிகளையும் குறிப்பாக பாம்பூருணியை துார்வாரி ஆக்கிரமிப்புகளைஅகற்றி கழிவு நீர் கலக்காமல் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.