/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சக்கர தீர்த்த தெப்பக்குளத்தில் சீமை கருவேல மரங்கள் ஆக்கிரமிப்பு: அகற்றி சுத்தம் செய்யுங்க

ADDED : மே 11, 2025 11:20 PM

திருப்புல்லாணி; திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயில் முன்புறமுள்ள சக்கர தீர்த்த தெப்பக்குளத்தின் வடக்கு கரையோர பகுதியில் உள்ள நிலப்பகுதியில் ஏராளமான சீமை கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்து வருகின்றன. அவற்றை அகற்றிட வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தினர்.
திருப்புல்லாணி சக்கர தீர்த்த தெப்பக்குளம் 5 ஏக்கரில் அமைந்துள்ளது. ஒவ்வொரு பருவ மழை காலங்களிலும் மழை நீர் வீணாக கடலுக்கு செல்வது தடுத்து நிறுத்தப்பட்டு இங்குள்ள பெரிய மதகு குட்டத்தில் இருந்து சக்கர தீர்த்த குளத்தில் தண்ணீர் நிரப்பப்படுகிறது.
தற்போது பெய்த கோடை மழையிலும் நிரம்பி உள்ளது. இந்நிலையில் சக்கர தீர்த்த தெப்பக்குளத்தின் வடக்கு கரையோர பகுதியில் உள்ள நிலப்பகுதியில் ஏராளமான சீமை கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்து வருகின்றன.
பக்தர்கள் கூறியதாவது: சக்கர தீர்த்த தெப்பக்குளம் வடக்கு பகுதியில் பராமரிப்பு இல்லாததால் முழுவதும் சீமை கருவேல மரங்களின் தாக்கத்தால் விஷ ஜந்துக்களின் நடமாட்டம் உள்ளது.
எனவே திருப்புல்லாணி ஊராட்சி நிர்வாகத்தினர் இதற்கான நிதியை ஒதுக்கீடு செய்து தெப்பக்குளத்தை துாய்மையாக வைத்திருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.