/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பொறியாளர்கள், வேளாண் அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
/
பொறியாளர்கள், வேளாண் அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : பிப் 01, 2026 05:34 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட அரசு பொறியாளர்கள் கூட்டமைப்பு, அரசு வேளாண்மை பட்ட தாரிகள் சங்கம் சார்பில் கலெக்டர் அலுவலகம் அருகே கருப்பு பேட்ஜ் அணிந்து கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது.
மத்திய அரசுக்கு இணையாக ஊதியம் வழங்கப்படும் என கடந்த தேர்தலின் போது தி.மு.க., அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்.
காலி பணியிடங் களை நிரப்ப வேண்டும். ஊரக வளர்ச்சித் துறை யில் பொறியாளர் பட்டதாரிகள் விகிதத்தை குறைக்கும் முயற்சியை கைவிட வேண்டும்.
பொறியியல் சீராய்வுக்குழு அமைக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர். அரசு பொறியாளர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள், உறுப்பினர்கள், அரசு வேளாண்மை பட்டதாரி கள் சங்கம் நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர்.

