/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மாணவர்கள் களப்பயணம்
/
சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மாணவர்கள் களப்பயணம்
ADDED : ஜன 10, 2026 05:40 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் பள்ளிக் கல்வித்துறை இணைந்து இரு நாட்கள் பள்ளி மாணவர்களின்சுற்றுச்சூழல் விழிப்புணர்வு களப்பயணம் மேற்கொண்டனர்.
கலெக்டர் அலுவலக வளாகத்தில் இப்பயணத்தை முதன்மை கல்வி அலுவலர் ரஜினி துவங்கி வைத்தார். ராமநாதபுரம் வன ரேஞ்சர் திவாகர் முன்னிலை வகித்தார். முதல் நாள்மண்டபம் மீன் ஆராய்ச்சி நிலையம், தங்கச்சிமடம் நாரைகள் சரணாலயம், தனுஷ்கோடி அரிச்சல் முனை, அரியமான் பீச் போன்ற இடங்களுக்கு 10 அரசுப் பள்ளிகளில் இருந்து 50 மாணவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.
2ம் நாள் தேர்த்தங்கால் சக்கரக்கோட்டை பறவைகள் சரணாலயம் ஐந்திணை மரபியல் பூங்கா ஆகிய இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு விழிப்புணர்வு வினாடி வினா போட்டிகள் நடந்தது.வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும், பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
மாவட்ட சுற்றுச் சூழல் ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார், முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் ஆரோக்கியதாஸ், ஆசிரியர்கள் மணிவண்ணன், முத்துச்சரவணன் பங்கேற்றனர்.

