/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு
/
சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு
ADDED : பிப் 12, 2025 06:19 AM

ராமநாதபுரம் : ராமநாதபுரம் இன்பன்ட் ஜீசஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட அளவிலான சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.
பள்ளி வளாகத்தில் மாவட்ட சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை சார்பில் சுற்றுச்சூழல் கல்வி திட்டத்தில் மதுரை கிரீன் டிரஸ்ட் இணைந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பிரசார கலைப் பயணம் 2025 நிகழ்ச்சிகள் நடந்தன.
முதல்வர் தாமஸ் துவக்கி வைத்தார். மாவட்ட சுற்றுச்சூழல் கல்வித்திட்ட ஒருங்கிணைப்பாளர் பெர்னாடிட், பரமக்குடி கல்வி மாவட்ட சுற்றுச்சூழல் கல்வித்திட்ட ஒருங்கிணைப்பாளர் தீனதயாளன் முன்னிலை வகித்தனர்.
மதுரை கல்வி மாவட்ட சுற்றுச்சூழல் கல்வித்திட்ட ஒருங்கிணைப்பாளர் குழந்தைவேல் நிகழ்ச்சி முக்கியத்துவம் குறித்து விரிவாக பேசினார். கரகாட்டம், ஒயிலாட்டம் ஆகிய கலைநிகழ்ச்சிகள் மூலம் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதே போல ராமநாதபுரம் சி.எஸ்.ஐ., ஆசிரியர் பயிற்சி பள்ளி, ஆல்வின் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, முகமது சதக் தஸ்தகீர் பெண்கள் கலைக்கல்லுாரி, முகமது சதக் தஸ்தகீர் கல்வியியல் கல்லுாரி ஆகிய இடங்களிலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசார நிகழ்ச்சி நடந்தது.

