
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.
விழாவிற்கு வட்டார மருத்துவ அலுவலர் முனீஸ்வரி தலைமை வகித்தார். மருத்துவமனை டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் மருத்துவமனை வளாகத்தில் பொங்கல் வைத்து பொங்கல் விழா கொண்டாடினர்.
தொடர்ந்து பொங்கல் படையலிட்டு வழிபாடு செய்யப்பட்டது. பின்பு மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பொங்கல் வழங்கப்பட்டது. விழாவை முன்னிட்டு மருத்துவமனை ஊழியர்கள் ஒருவருக்கொருவர் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
டாக்டர் கவுதமி உட்பட சுகாதாரத்துறை அலுவலர்களும், ஊழியர்களும் கலந்து கொண்டனர்.