
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலாடி: கீழக்கரை செய்யது ஹமீதா கலை அறிவியல் கல்லுாரி மற்றும் கடலாடி பொதுமக்கள் இணைந்து நடத்திய சமத்துவ பொங்கல் விழா நடந்தது. முதல்வர் ராஜசேகர் தலைமை வகித்தார். தர்மர் எம்.பி., முன்னிலை வகித்தார்.
பானையில் பொங்கலிட்டு கரும்புகள் படைத்து அனைவருக்கும் பரிமாறப்பட்டது. பள்ளி மாணவர்கள், கல்லுாரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இடையே விளையாட்டு, கோலப் போட்டிகள் நடத்தப்பட்டது. போட்டியில் வென்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
உடற்கல்வி இயக்குனர் தவசலிங்கம், கடலாடி ஊராட்சித் தலைவர் ராஜமாணிக்கம் லிங்கம், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் பத்மநாபன் உட்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை கல்லுாரி கணினியியல் துறை தலைவர் காசிக்குமார் செய்திருந்தார்.