நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே சக்கரகோட்டை சேதுநகரில் டாக்டர் அம்பேத்கர் இளைஞர் சங்கம் சார்பில், சந்தனமாரியம்மன் கோயில் வளாகத்தில் பொங்கல் விழா நடந்தது.
பொங்கல் வைத்து, ஓவியம், நடனம், கட்டுரை போட்டிகள் நடந்தது. வக்கில் செல்வம் கயிறு இழுத்தல் போட்டியை துவங்கி வைத்தார். சங்க நிர்வாகிகள், ஊர்மக்கள் பங்கேற்றனர்.
* ஆர்.எஸ்.மங்கலம் அருகே சனவேலியில், சமத்துவ பொங்கல் விழா நடந்தது.
விழாவிற்கு தி.மு.க., வடக்கு ஒன்றிய செயலாளர் கண்ணன் தலைமை வகித்தார்.
பொங்கல் வைத்த நபர்களுக்கு பரிசுகள் வழங்கினர். ஒன்றிய துணைத் தலைவர் சேகர், ஒன்றிய கவுன்சிலர்கள், நிர்வாகிகள் பங்கேற்றனர்.