ADDED : டிச 30, 2024 07:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரமக்குடி : - பரமக்குடி ஆயிர வைசிய பி.எட்., கல்லுாரியில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது. ஆயிர வைசிய சபை தலைவர் போஸ் தலைமை வகித்தார்.
இணைத் தலைவர் பாலுசாமி, செயலாளர்கள் செல்வராஜ், லெனின் முன்னிலை வகித்தனர். கல்லுாரிச் செயலாளர் வரதராஜன் வரவேற்றார். இணைச் செயலாளர்கள் இளையராஜா, சுதர்சன் வாழ்த்தினர். முதலாம், இரண்டாம் ஆண்டு மாணவிகளுக்கு கோல போட்டி, நெருப்பில்லா சமைக்கும் போட்டிகள் நடத்தப்பட்டது. முதல்வர் (பொ) அல்போன்சா நன்றி கூறினார்.