/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ரயில் நிலையத்தில் எஸ்கலேட்டர் மூத்த குடிமக்கள் கோரிக்கை
/
ரயில் நிலையத்தில் எஸ்கலேட்டர் மூத்த குடிமக்கள் கோரிக்கை
ரயில் நிலையத்தில் எஸ்கலேட்டர் மூத்த குடிமக்கள் கோரிக்கை
ரயில் நிலையத்தில் எஸ்கலேட்டர் மூத்த குடிமக்கள் கோரிக்கை
ADDED : அக் 03, 2024 04:22 AM
ராமநாதபுரம்: ரயில் கட்டணம் சலுகை மீண்டும் வழங்க வேண்டும். ராமநாதபுரம் ரயில் நிலையங்களில் எஸ்கலேட்டர், லிப்ட் வசதி செய்துதர வேண்டும் என ராமநாதபுரம் மாவட்ட மூத்த குடிமக்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
ராமநாதபுரத்தில் மாவட்ட மூத்த குடிமக்கள் கூட்டமைப்பு சார்பில் அக்.1ல் உலக முதியோர் தினவிழா நடந்தது. மாவட்டத்தலைவர் சேசுராஜ் தலைமை வகித்தார்.
துணைத் தலைவர் அன்சாரி முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன் வரவேற்றார். கனகமணி மருத்துவமனை டாக்டர் மதுரம் முதியோர்களுக்கு மருத்துவ ஆலோனை வழங்கினார்.
மாவட்ட சமூக நல அலுவலர் தேன்மொழி பெற்றோர், மூத்த குடிமக்கள் பராமரிப்புச் சட்டம் பற்றி விளக்கிப் பேசினார்.
ஈஸ்ட்கோஸ்ட் ராம்நாட் ரோட்டரி சங்கத் தலைவர் செங்குட்டுவன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதில் மூத்த குடிமக்களுக்கு ரயில் கட்டண சலுகை மீண்டும் வழங்க வேண்டும். ரயில் நிலையத்தில் எஸ்கலேட்டர், லிப்ட் வசதி செய்து தர ணே்டும்.
70 வயதானவர்களுக்கு தனிநபர் வருமானத்தை ரூ.7 லட்சமாக உயர்த்த வேண்டும் என வலியுறுத்தினர். மாவட்டப் பொருளாளர் ரவீந்திரன் நன்றி கூறினார்.