ADDED : மே 10, 2025 07:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: தமிழ்நாடு இணையதள விளையாட்டு ஆணையம் சார்பில் ஆன்-லைன் வழியாக கட்டுரைப்போட்டி நடந்தது. இதில், இணையதள விளையாட்டால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவர்கள் கட்டுரைகளை தமிழ், ஆங்கிலத்தில் வெளியிட்டனர்.
இதில் ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லுாரி முதலாம் ஆண்டு தகவல் தொழில்நுட்பத் துறை மாணவி பூஜா சாந்தினி ஆறுதல் பரிசு பெற்றார்.
தாளாளர் டாக்டர் சின்னத்துரை அப்துல்லா பரிசு வழங்கி பாராட்டினார். முதல்வர் பெரியசாமி முதலாம் ஆண்டு ஒருங்கிணைப்பாளர் ஜெயலட்சுமி பங்கேற்றனர்.