/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அதிகாரிகள் ஆய்வு செய்த பிறகும் குடிநீர் வராததால் மக்கள் சிரமம்
/
அதிகாரிகள் ஆய்வு செய்த பிறகும் குடிநீர் வராததால் மக்கள் சிரமம்
அதிகாரிகள் ஆய்வு செய்த பிறகும் குடிநீர் வராததால் மக்கள் சிரமம்
அதிகாரிகள் ஆய்வு செய்த பிறகும் குடிநீர் வராததால் மக்கள் சிரமம்
ADDED : மார் 06, 2024 04:48 AM
முதுகுளத்துார் : முதுகுளத்துார் அருகே கீழச்சாக்குளம் கிராமத்தில் இரண்டு மாதத்திற்கும் மேலாக காவிரி குடிநீர் வராத நிலையில் அதிகாரிகள் ஆய்வு செய்து சென்ற பிறகும் குடிநீர் வராதால் மக்கள் சிரமப்படுகின்றனர்.
கீழச்சாக்குளம் கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்கு தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டு காவிரி குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.
கடந்த இரண்டு மாதத்திற்கும் மேலாக முறையாக காவிரி குடிநீர் வரவில்லை.
மக்கள் வேறுவழியின்றி முதுகுளத்துார்- சாயல்குடி சாலை கீழச்சாக்குளம் முக்கு ரோட்டில் காவிரி குடிநீர் செல்லும் மெயின் குழாயில் அவ்வப்போது வரும் குடிநீரை பிடித்து மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.
கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கிராமத்தில் ஆய்வு செய்தனர்.
இந்நிலையில் தற்போது வரை காவிரி குடிநீர் வராதால் மக்கள் சிரமப்படுகின்றனர்.
டிராக்டர் தண்ணீரை வாங்கி பயன்படுத்தும் அவலநிலை உள்ளது.இதனால் அத்தியாவசிய வேலைக்கு செல்லும் பணியாளர்கள், பள்ளி மாணவர்கள் சிரமப்படுகின்றனர்.
எனவே கிராமத்திற்கு காவிரி குடிநீர் வழங்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

