தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ ஒவ்வொரு வீட்டிலும் சிறு நுாலகம் இருக்க வேண்டும்: எழுத்தாளர் பேச்சு

 ஒவ்வொரு வீட்டிலும் சிறு நுாலகம் இருக்க வேண்டும்: எழுத்தாளர் பேச்சு

 ஒவ்வொரு வீட்டிலும் சிறு நுாலகம் இருக்க வேண்டும்: எழுத்தாளர் பேச்சு


ADDED : ஜன 29, 2026 05:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 29, 2026 05:27 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ராமநாதபுரம்: நம் அனைவரின் வீட்டிலும் குறைந்தது 50 புத்தகங்கள் கொண்ட சிறு நுாலகம் இருக்க வேண்டும், என புத்தக திரு விழாவில் எழுத்தாளர்பாரதி கிருஷ்ணகுமார் வலியுறுத்தி பேசினார்.

ராமநாதபுரம் ராஜா மேல்நிலைப்பள்ளி விளையாட்டுத் திடலில் மாவட்ட நிர்வாகம், பள்ளிக்கல்வித்துறை, பொது நுாலக இயக்ககம், கலை இலக்கிய ஆர்வலர் சங்கம் சார்பில் புத்தக திருவிழா பிப்.,4 வரை நடக்கிறது.

இங்கு அரசின் பல்வேறு துறை சார்ந்த கண்காட்சிகள், கைவினைப் பொருட்கள் கடைகள், பயிற்சி பட்டறை, கோளரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

புத்தகங்கள் 10 சதவீத தள்ளுபடி விலையில் வாங்கலாம். 'போக்குவதற்கு அல்ல பொழுது' என்ற தலைப்பில் எழுத்தாளர்பாரதி கிருஷ்ணகுமார் பேசியதாவது:

அலைபேசி வந்தவுடன் பெரும்பாலானோர் நேரத்தை வீணாக போக்குகின்றனர்.

நேரத்தை சரியாக பயன்படுத்திய மகாத்மா காந்தி, பாரதியார், வ.உ.சி., போன்றோரின் பெயர் தற்போது வரை நிலைத்திருக்கிறது. அனைவரின் வீட்டிலும் குறைந்தது 50 புத்தகங்கள் கொண்ட சிறு நுாலகம் இருக்க வேண்டும்.

புத்தகம் இல்லாத வீடு கல்லறைக்கு சமம். புத்தகம் வாசித்தல், நேர மேலாண்மையை குழந்தைகளுக்கு பயிற்றுவிக்க வேண்டும் என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us