/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நன்னடைத்தை சான்றிதழ் பெறுவதற்காக தாசில்தாரிடம் ஆஜராகும் பழைய குற்றவாளிகள்

ADDED : ஆக 20, 2025 11:25 PM
திருவாடானை : பசம்பொன் முத்துராமலிங்கதேவர் குருபூஜை மற்றும் இமானுவேல் சேகரன் நினைவு நாளை முன்னிட்டு பழைய குற்றவாளிகளை தாசில்தாரிடம் ஆஜர்படுத்தி நன்னடைத்தை சான்றிதழ் பெறும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
பரமக்குடியில் செப்.11ல் இமானுவேல்சேகரன் நினைவு நாள் நடைபெறவுள்ளது. கமுதி அருகே பசும்பொன்னில் அக்.29, 30ல் முத்துராமலிங்கதேவர் குருபூஜை நடைபெறவுள்ளது. இந்நிலையில் பழைய குற்றவாளிகளை தாசில்தாரிடம் ஆஜர்படுத்தி நன்னடத்தை சான்றிதழ் பெறும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து போலீசார் கூறியதாவது- திருவாடானை சப்-டிவிசனில் திருவாடானை, தொண்டி, எஸ்.பி.பட்டினம், ஆர்.எஸ்.மங்கலம், திருப்பாலைக்குடி ஆகிய ஐந்து போலீஸ்ஸ்டேஷன்கள் உள்ளன.
சட்டம், ஒழுங்கு பிரச்னைகளை தவிர்க்கும் வகையில் பழைய குற்றவாளிகள் கண்காணிக்கபட்டு வருகின்றனர்.
திருவாடானை சப்-டிவிசனில் 40க்கும் மேற்பட்ட பழயை குற்றவாளிகள் உள்ளனர்.
அவர்களை திருவாடானை தாசில்தார் ஆண்டி, ஆர்.எஸ்.மங்கலம் தாசில்தார் அமர்நாத் முன்னிலையில் ஆஜர்படுத்தி, ஒரு ஆண்டுக்கு எந்தவித குற்ற சம்பவங்களிலும் ஈடுபடக்கூடாது என நன்னடத்தை சான்றிதழ் பெறும் பணி நடக்கிறது என்றனர்.