/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
முன்னாள் ராணுவ வீரர் நலச் சங்க கூட்டம்
/
முன்னாள் ராணுவ வீரர் நலச் சங்க கூட்டம்
ADDED : ஏப் 07, 2025 06:57 AM

முதுகுளத்துார் : முதுகுளத்துார் தாலுகா அலுவலகம் அருகே சங்க கட்டடத்தில் முன்னாள் ராணுவ வீரர்கள் நல சங்கத்தின் 21வது ஆண்டு கூட்டம் நடந்தது. தலைவர் கண்ணன் தலைமை வகித்தார். செயலாளர் வேலு முன்னிலை வகித்தார். பொருளாளர் துரைச்சாமி வரவேற்று ஆண்டறிக்கை,வரவு, செலவு கணக்கு விவரங்களை வாசித்தார்.
கேப்டன் நீலகண்டன் பென்ஷன் பெறுவதில் உள்ள பிரச்னைகளை சரி செய்து கொடுப்பது பற்றியும், கடன் பெறுவது பற்றியும் நிர்வாகிகளுக்கு விளக்கம் அளித்தார். கடன், பென்ஷன் உள்ளிட்ட ஏதேனும் உறுப்பினர்கள் பெறுவதில் காலதாமதம் ஏற்பட்டால் சங்கத்தை அணுகினால் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும்.
இனிவரும் காலங்களில் சங்கம் சார்பில் நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் உறுப்பினர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் முன்னாள் ராணுவ வீரர்கள் பலர் கலந்து கொண்டனர். செந்தூர்பாண்டியன் நன்றி கூறினார்.

