/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
இயற்கை வேளாண்மை பள்ளி மாணவர்களுக்கான சுற்றுலா
/
இயற்கை வேளாண்மை பள்ளி மாணவர்களுக்கான சுற்றுலா
ADDED : செப் 05, 2025 11:16 PM

ராமநாதபுரம்:ராமநாதபுரம் வட் டாரத்திலிருந்து இயற்கை வேளாண்மை மாணவர் களுக்கான கல்விச் சுற்றுலா வின் கீழ் ராமநாதபுரம் வேலு மாணிக்கம் மேல்நிலைப்பள்ளி மாணவர் களுக்கு மதுரை வேளாண் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இயற்கை வேளாண்மை குறித்து கல்வி சுற்றுலா சென்றனர்.
அங்கு வேளாண்மை அறிவியல் நிலைய பேராசிரியர் சுப்பிரமணியன் இயற்கை வேளாண்மை குறித்து மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார். ரசாயான உரங்கள் ரூபவ் பூச்சி மருந்துகள் பூசப்பட்ட மற்றும் மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை பயன் படுத்துதல் கூடாது எனவும் விவசாயிகள் தங்களுக்கு தேவையான இடுபொருட்களை தங்களது பண்ணை கழிவுகளில் இருந்து உற்பத்தி செய்ய வேண்டும் என எடுத் துரைக்கப்பட்டது.
வேளாண்மை அறி வியல் நிலையம் இணை பேராசிரியர் சுரேஷ், தேன் வளர்க்கும் முறைகள் மற்றும் தேன் வகைகள் பற்றி மாணவர்களுக்கு விரிவாக எடுத்துரைத்தார் .
இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை ராமநாதபுரம் வேளாண்மை உதவி இயக்குநர் அம்பேத்குமார் செய்திருந்தார். பயிற்சி நிறைவாக ராமநாதபுர வட்டார தொழில்நுட்ப மேலாளர் கோசலாதேவி நன்றி கூறினார்.
* பரமக்குடியில் இயற்கை வேளாண்மை குறித்த மாணவர்களுக்கான கல்வி சுற்றுலாவில் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி மாணவர்கள் 100 பேர் பங்கேற்றனர்.
இதன்படி மதுரை வேளாண் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சென்றனர். வேளாண் அறிவியல் நிலைய பேராசிரியர் சுப்பிரமணியம் பயிற்சி அளித்தார். அங்கக பண்ணையம் செய்யும் முறைகள், முக்கியத்துவம் பற்றி எடுத்துரைக்கப்பட்டது.
ரசாயன உரங்கள், பூச்சி மருந்துகள் பூசப்பட்ட மற்றும் மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை பயன்படுத்தக் கூடாது. விவசாயிகள் தங்களுக்கு தேவையான இடுபொருட்களை தங்களது பண்ணை கழிவுகளில் இருந்து உற்பத்தி செய்ய வேண்டும் என்றனர்.
பரமக்குடி வேளாண் உதவி இயக்குனர் மனோகரன் ஏற்பாடுகளை செய்தார். உதவி தொழில்நுட்ப மேலாளர் சிவகுமார் நன்றி கூறினார்.