ADDED : ஏப் 12, 2025 05:57 AM

அ நிறம் | அளவு
ராமநாதபுரம் : ராமநாதபுரம் வளர்ச்சி மகாலில் தமிழ்நாடு சத்துணவு ஓய்வூதியர் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது.
மாவட்டத்தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். தேர்தல் வாக்குறுதிபடி சத்துணவு, அங்கன்வாடி பணியார்களுக்கு அகவிலைப்படியுடன் ரூ.6750 வழங்க வேண்டும். ஏப்.,24ல் சென்னையில் சமூக நலத்துறை அலுவலகம் முன்பு நடக்கும் போராட்டத்தில் அனைவரும் பங்கேற்பது என முடிவு செய்தனர். மாநில செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன், மாவட்ட துணை தலைவர் மணிமொழி,மாவட்ட ஆலோசகர் அம்பிராஜ் பங்கேற்றனர்.
