நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் குலசேகரபாண்டியன் தலைமையில் நடந்தது.
ஆக.,2ல் ராமநாத புரத்தில் இயக்கக்கொடி ஏற்றுவது என்றும், ஆக.,22ல் சென்னை தலைமை செயலகம் முற்றுகை போராட்டத்தில் 500 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொள்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முன்னாள் மாவட்ட செயலாளர் ராபர்ட் ஜெயராஜ், மாவட்ட பொருளாளர் ஜேம்ஸ்மேரி, வட்டாரச் செயலாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.