ADDED : பிப் 08, 2026 05:29 AM
அ நிறம் | அளவு
ராமநாதபுரம்: தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர் சங்க மாவட்ட செயற்குழுக் கூட்டம் ராமநாதபுரத்தில் நடந்தது.
மாவட்டத் தலைவர் தினகரன் தலைமை வகித்தார். கூட்டத்தில் தனித்துறை, ஊதிய உயர்வு உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்.10, 11, 12 ஆகிய தேதிகளில் தொடர் வேலை நிறுத்தம் நடத்தப்படும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
