ADDED : செப் 02, 2026 03:10 PM
அ நிறம் | அளவு
முதுகுளத்துார்: முதுகுளத்துாரில் த.மு.மு.க., மற்றும் ம.ம.க., கட்சி ராமநாதபுரம் தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் வாவா ராவுத்தர் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர்கள் சம்சுகனி, நஜீபுர் ரஹ்மான், மாவட்ட பொருளாளர் சாகுல் ஹமீது முன்னிலை வகித்தனர்.
செப்.,20ல் மாவட்ட பொதுக்குழு கூட்டம் முதுகுளத்துாரில் நடத்தி புதிய மாவட்ட நிர்வாகம் தேர்வு செய்ய முடிவு செய்யப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. உடன் மாவட்ட துணைத் தலைவர் ஜாகிர் உசேன் உட்பட நிர்வாகிகள் பலர் இருந்தனர்.
