/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
காட்சிப்பொருளாகும் ஐ.ஓ.பி., ஏ.டி.எம்.,
/
காட்சிப்பொருளாகும் ஐ.ஓ.பி., ஏ.டி.எம்.,
ADDED : ஜன 15, 2024 11:14 PM
கடலாடி : கடலாடியில் கடந்த நான்கு நாட்களாக ஏ.டி.எம்., மிஷின் செயல்பாடின்றி முடங்கியுள்ளதால் வாடிக்கையாளர்கள் அவதி அடைகின்றனர்.
கடலாடியில் ஐ.ஓ.பி., வங்கி ஏ.டி.எம்., மற்றும் தனியார் வங்கி ஏ.டி.எம்., இரண்டு மட்டுமே உள்ளது. கடலாடி நகருக்கு சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் வங்கி பரிவர்த்தனையில் பணம் எடுக்கவும், பணம் செலுத்தவும் வசதியுடைய ஏ.டி.எம்., பயன்பாடின்றி காட்சி பொருளாக உள்ளது. கடலாடி வர்த்தக சங்க நிர்வாகிகள் கூறியதாவது: கடந்த மூன்று நாட்களாக ஐ.ஓ.பி., வங்கியில் உள்ள ஏ.டி.எம்.,ல் பணம் எடுக்க முடியாமல் இயந்திரம் பழுதாகி உள்ளது. தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தொடர் விடுமுறை உள்ளது. இதனால் 12 கி.மீ.,ல் உள்ள சாயல்குடிக்கும், 24 கி.மீ.,ல் உள்ள முதுகுளத்துார் சென்று வர வேண்டி உள்ளது. வெளியூர் வியாபாரிகள் கடலாடிக்கு வந்து ஏ.டி.எம்., இயந்திரத்தின் சேவை குறைபாட்டால் அவதி அடைகின்றனர். எனவே கடலாடி வங்கி நிர்வாகம் பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில் புதிய ஏ.டி.எம்., மிஷினை நிறுவி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.