
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே திருப்பாலைக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், அறிவியல் கண்காட்சி நடந்தது.
மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் பிரின்ஸ் ஆரோக்கியராஜ் தலைமை வகித்தார். வட்டார கல்வி அலுவலர்கள் தமிழரசி, தேன்மொழி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கண்காட்சியில் மாணவர்கள் ஏவுகணை, வான்வழி, கடல் வழி போக்குவரத்துகள், செயற்கை கோள்கள், தொலைக்காட்சி உள்ளிட்ட படைப்புகள் இடம்பெற்றன.
யூனியன் தலைவர் ராதிகா, வட்டார வள மேற்பார்வையாளர் சுரேந்திரன், பி.டி.ஐ., தலைவர் பாத்திமா, மேலாண்மை குழு தலைவர் ராணி, தலைமை ஆசிரியர் ராஜு பங்கேற்றனர்.

