துாய்மை பணியாளர்களுக்கு காலை உணவுத்திட்டம் விரிவாக்கம்
துாய்மை பணியாளர்களுக்கு காலை உணவுத்திட்டம் விரிவாக்கம்
ADDED : பிப் 10, 2026 05:42 AM
ராமநாதபுரம்: முதல்வர் ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொளி வாயிலாக துாய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை துவக்கினார். இதையடுத்து ராமநாதபுரம் நகராட்சி துாய்மைப் பணியாளர்களுக்கு காலைஉணவுத் திட்டம் விரிவாக்கம் துவக்க நிகழ்ச்சி தனியார் மகாலில்நடந்தது.
கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் துாய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கி துவக்கிவைத்தார். ராமநாதபுரம் நகராட்சி தலைவர் கார்மேகம்,கமிஷனர் அஜிதாபர்வின், நகர்நல அலுவலர் ரெத்தினகுமார், சுகாதாரஆய்வாளர் முத்துக்குமார், நகராட்சி கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
பரமக்குடி பரமக்குடியில் எம்.எல்.ஏ., முருகேசன் திட்டத்தை துவக்கி வைத்தார். நகராட்சி தலைவர் சேதுகருணாநிதி தலைமை வகித்தார். துாய்மை பணியாளர்கள், டிரைவர்கள், டெங்கு ஒழிப்பு ஊழியர்கள் என 322 பேருக்கு உணவு பரிமாறப்பட்டது. நகராட்சி துணைத் தலைவர் குணா, கமிஷனர் தாமரை, சுகாதார ஆய்வாளர் (பொ) மதன், நகராட்சி கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
தொண்டி தொண்டி பேரூராட்சி தலைவர் ஷாஜகான்பானு தலைமை வகித்தார். துாய்மைப் பணியாளர்களுக்கு காலை உணவுகளை வழங்கி திட்டத்தை துவக்கி வைத்தார். செயல்அலுவலர் பாலசுப்பிரமணியன் மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சி தலைவர் மவுசூரியா தலைமை வகித்தார். செயல் அலுவலர் மாலதி, தி.மு.க., நகரச் செயலாளர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருவாடானை எம்.எல்.ஏ., கருமாணிக்கம் துாய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கி திட்டத்தை துவங்கி வைத்தார். பேரூராட்சி கவுன்சிலர்கள், அலுவலர்கள் பங்கேற்றனர்.
