ADDED : ஜூலை 30, 2025 11:14 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை; ஆடிப்பட்டம் விதைப்புக்கு ஏற்ற காலம் என்பதால் மழையை விவசாயிகள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தின் நெற்களஞ்சிய மாக திருவாடானை தாலுகா திகழ்கிறது. கோடை உழவு முடிந்து விதைப்பு காலத்தை விவசாயிகள் எதிர்நோக்கி உள்ளனர். ஆடிப்பட்டம் விதைப்புக்கேற்ற காலம் என்பதால் பெரிதும் ஆவலுடன் உள்ளனர். ஆனால் வறண்ட காற்றின் வேகம் அதிகமாகி வெயில் வாட்டி வதைக்கிறது.
விதைப்புக்கான மழை பெய்யும் அறிகுறியும் இல்லை. இது குறித்து விவசாயிகள் கூறுகையில், விதைப்புக்கு நிலத்தை தயார்படுத்தி வைத்துள்ளோம். ஆடிப்பட்டத்தில் விதைப்பது நல்லது என்பதால் மழையை எதிர்பார்த்துள்ளோம் என்றனர்.

