/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கடலாடி ஐ.டி.ஐ.,யில் புதிய கட்டடத்திற்கு எதிர்பார்ப்பு
/
கடலாடி ஐ.டி.ஐ.,யில் புதிய கட்டடத்திற்கு எதிர்பார்ப்பு
கடலாடி ஐ.டி.ஐ.,யில் புதிய கட்டடத்திற்கு எதிர்பார்ப்பு
கடலாடி ஐ.டி.ஐ.,யில் புதிய கட்டடத்திற்கு எதிர்பார்ப்பு
ADDED : ஏப் 05, 2025 05:59 AM
கடலாடி: கடலாடி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் 2023 முதல் ஐ.டி.ஐ., செயல்படுகிறது. இங்கு பிட்டர், மோட்டார் மெக்கானிக், ஏசி மெக்கானிக், எலக்ட்ரீசியன் உள்ளிட்ட நான்கு பாடப்பிரிவுகள் உள்ளன.
இரண்டு ஆண்டு படிப்புகளுக்கு உட்பட்ட முதல் பேட்ஜ் மாணவர்கள் வந்துள்ளனர். இந்நிலையில் கடலாடி அருகே எம்.கரிசல்குளம் ரோட்டில் 2 கி.மீ.,ல் ரூ.7 கோடியில் அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளுடன் புதிய ஐ.டி.ஐ., கட்டடம் கட்டுமானப் பணி நடந்து வருகிறது.
தற்சமயம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஐ.டி.ஐ., செயல்படுவதால் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப முறையான கட்டமைப்பு வசதிகள் குறைவான நிலையில் உள்ளது. கடலாடி ஐ.டி.ஐ.,க்கான புதிய கட்டுமானப் பணி நிறைவடைந்து வருகிற மே மாதத்திற்குள் பயன்பாட்டிற்கு வரவுள்ளதாக நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.