தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ பரமக்குடியில் காலாவதியான பிஸ்கட்கள் கொட்டி தீ வைப்பு

 பரமக்குடியில் காலாவதியான பிஸ்கட்கள் கொட்டி தீ வைப்பு

 பரமக்குடியில் காலாவதியான பிஸ்கட்கள் கொட்டி தீ வைப்பு


ADDED : ஜன 12, 2026 06:47 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 12, 2026 06:47 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பாதிப்புக்கு யார் பொறுப்பு

பரமக்குடி: பரமக்குடியில் காலாவதியான பிஸ்கட் பாக்கெட்டுகளை தீ வைத்து எரிக்கும் நிலையில் ஆங்காங்கே கொட்டி வைப்பதால் அவற்றை சாப்பிடுவோருக்கு ஆபத்து காத்திருக்கிறது.

பரமக்குடி சர்வீஸ் ரோட்டோரம் ஏராளமான பிஸ்கட், பிரட் மற்றும் ரஸ்க் ரொட்டிகள் என பிளாஸ்டிக் பேப்பர்களுடன் கொட்டி வைத்திருந்தனர். இவற்றை அழிக்கும் நோக்கில் ஒட்டுமொத்தமாக பிளாஸ்டிக் பேப்பர்களுடன் தீ வைத்தனர். இதனால் அந்த வழியாக செல்வோர் மூச்சு திணறலுக்கு ஆளாகினர்.

இதேபோல் அரைகுறையாக தீ வைத்துச் சென்ற பிஸ்கட் பாக்கெட்டுகளை அந்த வழியாக சென்றவர்கள் எடுத்து பார்க்கும் நிலை ஏற்பட்டது. இவற்றை அறியாமல் உண்ண முற்படுவோர் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும். ஆகவே உணவுப் பொருள் விற்பனையாளர்களை முறைப்படுத்தி காலாவதியான பொருட்களை உரிய வழிமுறைகளுடன் அப்புறப்படுத்த, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us