/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மீனவர்கள் விரட்டியடிப்பு இலங்கை அட்டூழியம்
/
மீனவர்கள் விரட்டியடிப்பு இலங்கை அட்டூழியம்
ADDED : டிச 16, 2024 02:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமேஸ்வரம்: நடுக்கடலில் மீன்பிடித்த ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் துப்பாக்கியை காட்டி எச்சரித்து விரட்டியடித்தனர்.
டிச.14ல் ராமேஸ்வரத்தில் இருந்து 379 விசைப்படகில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் வழக்கம்போல் இந்திய - இலங்கை எல்லையில் மீன்பிடித்தனர். அங்கு இரு கப்பலில் ரோந்து வந்த இலங்கை கடற்படை வீரர்கள் தங்கள் பகுதி எனக்கூறி துப்பாக்கியை காட்டி எச்சரித்து மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்தனர். இதனால் பீதியடைந்த 100க்கும் மேலான படகின் மீனவர்கள் அன்று இரவே வெறும் படகுடன் ராமேஸ்வரம் கரைக்கு திரும்பினர்.