/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கூட்டுறவு சங்கங்களில் பயிர் கடன் அவகாசம் நீட்டிப்பு: ஜன.31 வரை விவசாயிகள் பெறலாம்
/
கூட்டுறவு சங்கங்களில் பயிர் கடன் அவகாசம் நீட்டிப்பு: ஜன.31 வரை விவசாயிகள் பெறலாம்
கூட்டுறவு சங்கங்களில் பயிர் கடன் அவகாசம் நீட்டிப்பு: ஜன.31 வரை விவசாயிகள் பெறலாம்
கூட்டுறவு சங்கங்களில் பயிர் கடன் அவகாசம் நீட்டிப்பு: ஜன.31 வரை விவசாயிகள் பெறலாம்
ADDED : ஜன 20, 2024 04:26 AM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் கூட்டுறவு கடன் சங்கங்களில் தகுதியுள்ள விவசாயிகளுக்கு விவசாய கடனாக ரூ.320 கோடி ஜன.15 வரை வழங்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்ட சாகுபடியை ஊக்கப்படுத்தும் விதமாக தொடர்ந்து பயிர்கடன் பெறும் வகையில் ஜன.,31 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் கூட்டுறவு கடன் சங்கங்களில் 2021 -2022ல் 20,878 உறுப்பினர்களுக்கு ரூ.108 கோடியே 30 லட்சமும், 2022-2023ல் 42,595 உறுப்பினர்களுக்கு ரூ.261 கோடியே 78 லட்சம் பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது.
நடப்பு ஆண்டில் அனைத்து விவசாயிகளுக்கும் கடன் வழங்குவதற்கு மாவட்ட தொழில்நுட்ப குழுவினரால் 2022-23ம் ஆண்டிற்கு சாகுபடியாகும் பல்வேறு பயிர்களுக்கும், கால்நடைகள், மீன்கள் வளர்ப்புக்கும் தேவையான கடன் வழங்கும் காலம், தவணை காலம் ஆகியவற்றிற்கு அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி ஏக்கருக்கு நெல் (பாசனம் / மானாவரி) ரூ.27,600, ரூ.24,100, பருத்திக்கு ரூ. 23,150 / ரூ.14,600, மிளகாய் ரூ.28,100 / ரூ.21,900, தென்னை ரூ.23,100 வீதம் விவசாயிகளுக்கு கடன் வழங்கப்படுகிறது. கடந்த மாதம் வரை ரூ.320 கோடி பயிர்கடன் வழங்கப்பட்டுள்ளது.
தற்போது கண்மாய், ஊருணிகளில் தண்ணீர் உள்ளதால் விவசாயிகள் இரண்டாம் போகமாக நெல் சாகுபடி செய்யும் வகையில் பயிர் கடன் கடைசி நாள் ஜன.15ல் இருந்து தற்போது ஜன.31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர்(பொ) மனோகரன் கூறுகையில், கடந்த மாதம் வரை ரூ.320 கோடி பயிர்கடன் வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகள் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தை உரிய ஆவணங்களுடன் நெல் சாகுபடிக்கு அணுகி ஜன.31 வரை பயிர்கடன் பெறலாம். மற்ற பயிர்களுக்கு மார்ச் வரை கடன் பெற விண்ணப்பிக்கலாம் என்றார்.