ADDED : பிப் 19, 2025 04:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம், : ராமநாதபுரத்தில் ராஜா மேல்நிலைப்பள்ளியில் ஸ்ரீவேதா அறக்கட்டளை சார்பில் மதுரை அரவிந்த் கண்மருத்துவமனையுடன் இணைந்து இலவச கண்சிகிச்சை முகாம் நடந்தது.
அறக்கட்டளை அறங்காவலர் வீரமூர்த்தி தலைமை வகித்தார். டாக்டர் புனிதாஸ்ரீ மற்றும் சேவா பாரதி, ஸ்ரீசேகரபாண்டியன், சிவனடியார் முத்துகிருஷ்ணன், ஹரிராம், கீழக்கரை மணிகண்டன், மகளிர் ஒருங்கிணைப்பாளர் குமார், ஜோதிடர்கள் முருகையா, ராமகிருஷ்ணன் பங்கேற்றனர்.
முகாமில் ஏராளமானோர் பங்கேற்றனர். 60 பேர் அறுவை சிகிச்சைக்காக மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

