நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கீழக்கரை- கீழக்கரை ரோட்டரி சங்கம் சார்பில், சங்கரா கண் மருத்துவமனையுடன் இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.
தில்லையேந்தல் ஊராட்சி தலைவர் கிருஷ்ண மூர்த்தி தலைமை வகித்தார்.
ஏராளமானோர் கண் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டனர். ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் டாக்டர் ராசிக்தீன், தலைவர் சுல்தான் சம்சுல் கபீர், செயலாளர் எபன் பிரவீன் குமார், முன்னாள் செயலாளர் கார்த்திக், ஆர்.கே. பில்டர்ஸ் கண்ணன், சங்க உறுப்பினர்கள், ஜமாத் பிரமுகர்கள், பொது மக்கள் பங்கேற்றனர்.