/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நம்பிக்கை மைய பணியாளர்கள் அஞ்சல் அட்டை போராட்டம்
/
நம்பிக்கை மைய பணியாளர்கள் அஞ்சல் அட்டை போராட்டம்
ADDED : பிப் 08, 2024 08:52 AM
ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அனைத்து ஊழியர் நலச்சங்கத்தின் சார்பில், தமிழகத்தில் நம்பிக்கை மையங்களை மூடும் மத்திய அரசின் முடிவை தடுத்து நிறுத்தக்கோரி, அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம் நடந்தது.
மாவட்டத்தலைவர் சுரேஷ் தலைமை வகித்தார். கொரோனா பெருந்தொற்று கடந்துள்ள நிலையில் இந்தியாவில் எச்.ஐ.வி., பரிசோதனை முறைகளை வலுவாக்க வேண்டும், என உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் செயல்படும் எச்.ஐ.வி., ஆலோசனை மற்றும் பரிசோதனை செய்யும் நம்பிக்கை மையங்களை மூட மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
தமிழக அரசின் நல்வாழ்வுத்துறையின் மருத்துவ நோக்கங்களை சிதைக்கும் மத்திய அரசின் தவறான போக்குகளுக்கு தமிழக முதல்வர் இடமளிக்க கூடாது, என வலியுறுத்தி அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் செந்தில்குமார், துணைத்தலைவர் இளங்கோ பங்கேற்றனர்.----------

