/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தேங்காய் விலை வீழ்ச்சி: விவசாயிகள் பாதிப்பு
/
தேங்காய் விலை வீழ்ச்சி: விவசாயிகள் பாதிப்பு
ADDED : ஜன 20, 2024 01:26 AM
ராமநாதபுரம்:தேங்காய் விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் தென்னை விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர்.
தமிழக கடலோர மாவட்டங்களில் தென்னை விவசாயம் அதிகமாக உள்ளது. வடகிழக்கு பருவமழை அதிகம் பெய்துள்ள நிலையில் தேங்காய் விளைச்சல் இன்னும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
தற்போது தேங்காய் விலை குறைவாக உள்ளது. கொப்பரை கொள்முதலுக்கு சிறிய வியாபாரிகளால் தேங்காய் வழங்க முடியாது. இவர்கள் தேங்காய்களாக மட்டுமே சந்தையில் விற்பனை செய்ய முடியும்.
சந்தையில் தற்போது தேங்காய் ஒன்றின் விலை ரூ.5 முதல் ரூ.6க்கு வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இதனால் அவர்களுக்கு நஷ்டம் தான் ஏற்படும். தென்னை விவசாயிகள் சங்க ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் மணிமாதவன் கூறுகையில், தென்னை விவசாயம் நாளுக்குநாள் நலிவடைந்து வருகிறது.
தற்போது ஒரு காய் ரூ.5க்கு கொள்முதல் செய்கின்றனர். ரூ.15 முதல் ரூ.20க்கு கொள்முதல் செய்தால் மட்டுமே விவசாயிகளுக்கு லாபம் கிடைக்கும்.
ஆண்டுக்கு 45 நாட்களுக்கு ஒரு முறை என 8 முறை தேங்காய் வெட்டு இருக்கும். ஒரு மரத்தில் ஒவ்வொரு முறையும் தலா 30 காய்களுக்கு குறையாமல் இருக்க வேண்டும்.
வெள்ளை 'ஈ 'பாதிப்பால் ஒரு மரத்தில் 10 காய்கள் காய்ப்பதே அரிதாக உள்ளது. விளைச்சல் குறைந்துள்ள நிலையில் விலை வீழ்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ளோம் என்றார்.