/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் பட்டுப்போன மரத்தால் ஆபத்து
/
ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் பட்டுப்போன மரத்தால் ஆபத்து
ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் பட்டுப்போன மரத்தால் ஆபத்து
ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் பட்டுப்போன மரத்தால் ஆபத்து
ADDED : ஜன 17, 2025 05:13 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் ரோட்டோரத்தில் பட்டுப்போன மரக்கிளைகள் காற்றில் முறிந்து விழுவதால் வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயம் உள்ளது.
ராமநாதபுரம் நகர் துவங்கி பட்டணம்காத்தான், சக்கரகோட்டை ஊராட்சி, கிழக்கு கடற்கரைசாலையில் என ராமேஸ்வரம் ரோட்டோரத்தில் ஏராளமான மரங்கள் உள்ளன. இவற்றில் சில மரங்கள் அடிப்பகுதி சேதமடைந்தும், பட்டுபோன மரக்கிளைகளுடன் உள்ளன.
பலத்த காற்று வீசும்போது காய்ந்த கிளைகள் முறிந்து ரோட்டில் விழுகின்றன. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு விபத்து அபாயம் உள்ளது. குறிப்பாக பட்டணம்காத்தான் ராமநாதபுரம் - ராமேஸ்வரம் ரோட்டோரத்தில் தனியார் ஐஸ் பேக்டரி எதிரே அடிப்பகுதி சேதமடைந்துள்ள மரத்தால் விபத்து அபாயம் உள்ளது.
ராமேஸ்வரம் ரோட்டோரத்தில் அடிப்பகுதி சேதமடைந்த மரம் பலத்த காற்று மழையின் போது எப்போது வேண்டுமானலும் சாய்ந்து ரோட்டில் விழும் அபாயம் உள்ளது. எனவே 24 மணி நேரமும் போக்குவரத்து மிகுந்த மாநில, தேசிய நெடுஞ்சாலையில் பட்டுப்போன மரங்களை அகற்ற வேண்டும். அவற்றிற்கு பதில் புதிதாக மரக்கன்றுகள் நடுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும்.