/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சாலை ஓரத்தில் பட்டுப்போன மரங்களால் விபத்து அபாயம்
/
சாலை ஓரத்தில் பட்டுப்போன மரங்களால் விபத்து அபாயம்
ADDED : நவ 06, 2024 06:14 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை : திருவாடானையில் சாலை ஓரங்களில் பட்டுப்போன மரங்களால் விபத்து அபாயம் உள்ளது.
திருவாடானை தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் பட்டுப்போன மரங்கள் நிறைய உள்ளன. மதுரை- தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் பாரதிநகர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் பல்வேறு இடங்களில் பழமையான மரங்கள் உள்ளன. இந்த மரங்களால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அச்சத்தோடு செல்கின்றனர்.
தற்போது மழை பெய்து வருவதால் பலத்த காற்றில் விழும் அபாயம் உள்ளது. அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகளுக்கு ஆபத்து காத்திருக்கிறது. எனவே பட்டுப்போன மரங்களை உடனே அகற்ற தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.